சென்னையில் கொலை வழக்கில் தேடப்பட்ட ரவுடி சிக்கினான்

சென்னை வியாசர்பாடியில் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-03-09 10:00 GMT

சென்னையில் கொலை வழக்கு தொடர்பாக கைதான ரவுடி மைக்கேல்.

சென்னை வியாசர்பாடி கோல்டன் காம்ளக்ஸ் பகுதியை சேர்ந்தவர் மைக்கேல்(28) இவர் மீது எம்கேபி நகர், வியாசர்பாடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இதில் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில் இவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனையடுத்து எம்கேபி நகர் போலீசார் நேற்று மைக்கலை முல்லை நகர் சுடுகாடு அருகே வைத்து பிடித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News