வியாசர்பாடியை அச்சுறுத்திய பிரபல ரவுடி குணா கைது: பொதுமக்கள் நிம்மதி
சென்னை அருகே, வியாசர்பாடியில் பணம் பறித்த் வந்த பிரபல ரவுடி குணா கைது செய்யப்பட்டதால், பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
சென்னை வியாசர்பாடி எஸ் ஏ காலனி 3வது தெரு சேர்ந்தவர் குமார், வயது 31, இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்றுமுன் தினம் காலை, வியாசர்பாடி எஸ் ஏ காலனி மூன்றாவது தெரு வழியாக செல்லும்போது, குடிபோதையில் அங்கு வந்த நபர், கத்தியை காட்டி மிரட்டி குமாரிடம் இருந்து 1000 ரூபாய் பணத்தை பறித்து சென்றார்.
இதுகுறித்து, எம்கேபி நகர் காவல் நிலையத்தில், குமார் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர், சம்பவ இடத்திற்கு சென்று அதே பகுதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
இதில், அந்த நபர் வியாசர்பாடி எஸ் ஏ காலனியைச் சேர்ந்த குணா, வயது 26 என்பதும், அவர் மீது ஏற்கனவே வியாசர்பாடி எம்கேபி நகர், கொடுங்கையூர் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. ரவுடி குணா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.