பெரம்பூரில் போதைப்பொருள் குறித்து சைக்கிள் பேரணி மூலம் போலீசார் விழிப்புணர்வு

பெரம்பூரில் போதைப்பொருட்கள் குறித்து பொதுமக்களிடம் செம்பியம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2021-12-19 06:13 GMT

பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா பகுதியில் செம்பியம் உதவி கமிஷனர் செம்பேடு பாபு கொடியசைத்து சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் கஞ்சா குட்கா போன்ற போதை பொருட்களை அடியோடு அழிக்க வேண்டும் என சமீபத்தில் தமிழக டிஜிபி அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். இதனையடுத்து கஞ்சா மற்றும் போதை பொருட்களை விற்பவர்களை போலீசார் களையெடுத்து வருகின்றனர்.

மேலும் பொதுமக்களிடம் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று புளியந்தோப்பு சரகத்திற்கு உட்பட்ட செம்பியம் காவல் நிலைய போலீசர் பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா பகுதியில் இருந்து மாதவரம் நெடுஞ்சாலை பேப்பர் மில்ஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சைக்கிள்களில் போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த பதாகைகளை சைக்கிள்களில் ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.

பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா பகுதியில் செம்பியம் உதவி கமிஷனர் செம்பேடு பாபு கொடியசைத்து சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தார்.

இதில் உதவி கமிஷனர்கள் தமிழ்வாணன் அழகேசன், இன்ஸ்பெக்டர்கள் ஐயப்பன், பரணி, அம்பிகா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார் சைக்கிள்களில் பேரணியாக சென்றனர். மேலும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

Tags:    

Similar News