வியாசர்பாடி எம்கேபி நகர் பகுதிகளில் சைக்கிளில் ரோந்து பணியில் போலீசார்
எம்கேபி நகர் வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் சைக்கிளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.;
வியாசர்பாடி போலீசார் இரவு நேரங்களில் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
சென்னையில் குற்ற செயல்களை குறைப்பதற்காக போலீசார் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக தற்போது சென்னையில் மீண்டும் சைக்கிள் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மீண்டும் சென்னை பகுதியில் போலீசார் சைக்கிள் ரோந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தினார்.
அதன்படி நேற்று முதல் பல்வேறு காவல் நிலையங்களிலும் சைக்கிளில் ரோந்து செல்ல போலீசார் தொடங்கியுள்ளனர் அந்த வகையில் எம்கேபி நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன் எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் உள்ளிட்ட போலீசார் நேற்று எம்கேபி நகர் வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் சைக்கிள் ரோந்து பணியை துவக்கி வைத்தனர்.
தினமும் சுழற்சி முறையில் காவலர்கள் மற்றும் பெண் போலீசார் எம்கேபி நகர் மற்றும் வியாசர்பாடி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் எனவும் குற்ற செயல்கள் அதிகமாக நடைபெறும் பகுதிகளிலும் மேலும் குறுகலான சாலைகள் உள்ள பகுதிகளிலும் போலீசார் தினமும் சைக்கிள்களில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் பொது மக்களுக்கும் காவலர்களுக்கும் இடையே ஒரு நல்லுறவை ஏற்படுத்த முடியும் என போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.