தேர்தலை முன்னிட்டு புளியந்தோப்பு சரகத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு புளியந்தோப்பு சரகம் முழுவதும் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.;

Update: 2022-02-10 12:15 GMT

கொடி அணிவகுப்பில் ஈடுபட்ட போலீசார். 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  தேர்தல் நேரத்தில் பொதுமக்கள் எந்தவித அச்சமும் இனறி வாக்களிக்க ஏதுவாக, போலீசார் கொடி அணிவகுப்பு நடத்துவது வழக்கம்.  அந்த வகையில் புளியந்தோப்பு சரகத்திற்கு உட்பட்ட செம்பியம்,  ஓட்டேரி, புளியந்தோப்பு,  பேசின்பிரிட்ஜ்,  வியாசர்பாடி,  எம்கேபி நகர், கொடுங்கையூர்,  திருவிக நகர்,  பெரவள்ளூர் ஆகிய ஒன்பது காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில், புளியந்தோப்பு சரக போலீசார் கொடி அணிவகுப்பை நடத்தினர்.

பெரம்பூர் ஜமாலியா பள்ளி மைதானத்தில் இருந்து புறப்பட்ட இந்த கொடி அணி வகுப்பினை,  புளியந்தோப்பு சரக துணை கமிஷனர் ஈஸ்வரன் துவக்கி வைத்தார். இதில் உதவி கமிஷனர்கள் அழகேசன், தமிழ்வாணன்,  செம்பேடு பாபு மற்றும் 9 காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களும் கலந்து கொண்டனர். பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, குக்ஸ் ரோடு, டிம்லர்ஸ் ரோடு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை,  அம்பேத்கர் கல்லூரி சாலை, பல்லவன் சாலை வழியாக திருவிக நகர் பேருந்து நிலையத்தில் கொடி அணிவகுப்பு நிறைவுற்றது. 

Tags:    

Similar News