எம்கேபி நகரில் மது விற்ற 2 பெண்கள் கைது: 300 மதுபாட்டில்கள் பறிமுதல்
சென்னை எம்கேபி நகரில் மதுபானம் விற்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்; 300 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. இதனால் கள்ளச்சந்தையில் மது பாட்டில்களை பதுக்கி விற்கும் நோக்கில், முன்கூட்டியே சிலர் மதுபாட்டில்களை பதுக்கி வைக்க தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் சென்னை வியாசர்பாடி சஞ்சய் நகர் பகுதியில், ஒரு வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக. எம்கேபி நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று எம்கேபி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திடீர் சோதனை செய்தனர். இதில், அந்த வீட்டில் பெட்டிப்பெட்டியாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர். வீட்டில் இருந்து 300 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, பதுககி வைத்திருந்த செல்வி 43 என்ற பெண்ணையும் கைது செய்தனர்/
இதேபோன்று, எம்கேபி நகர் மேம்பாலம் கீழ்ப்பகுதியில், கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ப்பதாக கிடைத்த தகவலின் பேரில் எம்கேபி நகர் போலீசார் விசாரணை நடத்தினர் அப்போது, வியாசர்பாடி கக்கன்ஜி காலனி பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரி 54 என்ற பெண், கள்ளச்சந்தையில் மதுபானம் விற்றுக் கொண்டிருந்தார் அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.