சென்னை எம்.கே.பி. நகரில் மதுபானங்களை பதுக்கிய பெண் உட்பட 2 பேர் கைது

மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் அதிக மதுபானங்களை பதுக்கிய பெண் உட்பட 2 பேர் கைது.

Update: 2022-02-14 06:45 GMT

மதுபானம் பதுக்கி கைதானவர்கள். 

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு,  வரும் 17-ஆம் தேதி முதல், 19 ஆம் தேதி வரை மூன்று தினங்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கள்ளச்சந்தையில் மது பானம் வாங்கி விற்பவர்கள்,   முன்கூட்டியே  கடைகளில் மதுபானங்களை வாங்க தொடங்கியுள்ளனர்.

அவ்வகையில் எம்கேபி நகர் மேம்பாலம் அருகே உள்ள பகுதியில் ஒரு மதுபானக் கடையில்,  பெண் உட்பட இருவர் அதிக மதுபாட்டில்களை வாங்குவதாக எம்கேபி நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  சம்பவ இடத்திற்குச் சென்ற எம்கேபி நகர் போலீசார், மதுபானக் கடையில் இருந்து மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி வெளியே வந்த இரண்டு பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் புளியந்தோப்பு சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த சிறுமலர் என்கிற வரலட்சுமி 36 மற்றும் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் 24 என்பது தெரியவந்தது. மூன்று நாள் மதுபானக்கடைகள் மூடப்படுவதால் அன்றைய தினம் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்க மொத்தமாக மதுபானங்களை வாங்கியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 374 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News