வியாசர்பாடியில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற பெண் கைது
சென்னை அருகே, வியாசர்பாடியில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.;
கைதான அஞ்சலை.
சென்னை அருகே வியாசர்பாடி பகுதியில், இரவு நேரங்களில் மதுக்கடைகள் மூடிய பின்பு மதுபானம் விற்கப்படுவதாக எம்கேபி நகர் போலீசார்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் வியாசர்பாடி தாமோதரன் நகர் 5வது தெரு பகுதியில், நேற்று இரவு எம்கேபி நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் மதுபானம் பதுக்கி விற்கப்படுவதை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து அந்த வீட்டில் இருந்த அஞ்சலை, வயது 41 என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட அஞ்சலை மீது, ஏற்கனவே மதுபானம் விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அஞ்சலையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எம்கேபி நகர் போலீசார் சிறையில் அடைத்தனர்.