வியாசர்பாடியில் டீ கடை வியாபாரியை மிரட்டி பணம் பறிப்பு : 3 பேர் கைது

வியாசர்பாடியில் டீ கடை வியாபாரியை மிரட்டி பணம் பறித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-01-08 07:02 GMT
பைல் படம்

சென்னை வியாசர்பாடி எம்கேபி நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் சங்கர் வயது 30 இவர் வியாசர்பாடி சென்ட்ரல் அவென்யூ சாலையில் டீக்கடை நடத்தி வருகிறார் நேற்று முன்தினம் இரவு இவரது டீக்கடைக்கு வந்த மூன்று நபர்கள் இவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

சங்கர் பணம் தர மறுக்கவே அவர்களிடம்  இருந்த கத்தியை எடுத்து பணம் தரவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று கூறி கல்லாவில் இருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து சென்றனர். இதுகுறித்து சங்கர் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்  புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் ஏற்கனவே பல குற்ற வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் இதில் ஈடுபட்டது தெரியவந்தது இதனையடுத்து நேற்று வியாசர்பாடி முல்லை நகர் சுடுகாடு அருகே பதுங்கியிருந்த  ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் 24 அதே பகுதியைச் சேர்ந்த டேனிஸ்   25 மற்றும் ஓட்டேரி நாராயண மேஸ்திரி தெரு பகுதியைச் சேர்ந்த சூர்யா 21 ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News