பெரம்பூரில் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா

பெரம்பூரில் மின் சிக்கனம் மற்றம் பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.;

Update: 2021-12-19 02:45 GMT
பெரம்பூரில் நடந்த மின் சிக்கன வார விழா

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் டிசம்பர் 14 முதல் 20 வரை மின்சார சேமிப்பு வாரமாக கடைபிடிக்கபடுகிறது.

பொதுமக்கள் பயனாளிகள் மின்சாரத்தை எவ்வாறு சேமிக்க வேண்டும் என அந்தந்த பகுதி மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் மின்சார சேமிப்பு வாரம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பெரம்பூர் கோட்டம் சார்பில் மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகர். பெரம்பூர் கோட்ட செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் உதவி பொறியாளர்கள் மின்வாரிய ஊழியர்கள் என 50க்கும் மேற்பட்டோர் பெரம்பூர் பேருந்து நிலையம் அருகே   நின்று பொதுமக்களுக்கு மின்சார சேமிப்பிற்கான வழிமுறைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை வழங்கினர். தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் மின்சாரத்தின் அவசியம் குறித்தும் விளக்கம் அளித்தனர்.

Tags:    

Similar News