சென்னை எம்.கே.பி. நகர் பகுதியில் திருடர்களுக்கு உதவிய திருநங்கை கைது

சென்னை எம்.கே.பி. நகர் பகுதியில் திருடர்களுக்கு உதவிய திருநங்கையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2022-01-19 11:58 GMT
கைது செய்யப்பட்ட திருநங்கை.

சென்னை வியாசர்பாடி காந்தி நகர் 4வது தெருவில் வசித்து வருபவர் மல்லிகா (வயது 63 ).இவர் கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் தேதி காலை 7 மணி அளவில் எம்.கே.பி. நகர் சர்மா நகர் 1வது மெயின் ரோடு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு நபர்கள் மல்லிகாவை தாக்கிவிட்டு அவர் கழுத்திலிருந்த 8 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியைச் சேர்ந்த அஜித் குமார் குப்தா என்கின்ற வெள்ளை அஜித்( 22 )மற்றும் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த முகேஷ்( 19 )ஆகிய இரண்டு நபர்களை கடந்த 12ஆம் தேதி கைது செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 8 சவரன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவத்தில் தங்கச்சங்கிலியை திருடர்களிடம் இருந்து வாங்கி அடகு கடையில்  அடமானம் வைத்து திருடர்களுக்கு உதவி செய்து வந்த அயனாவரம் புது நகர் பகுதியைச் சேர்ந்த சஞ்சனா( வயது 29 )என்ற திருநங்கையை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை எம். கே. பி.நகர் போலீசார் சஞ்சனாவை கைது செய்தனர்  அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News