கொடுங்கையூரில் 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

சென்னை, கொடுங்கையூரில் 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்து ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-01 04:08 GMT

கைது செய்யப்பட்ட காமராஜ்.

சென்னை, கொடுங்கையூர் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து, அதனை பாலிஷ் செய்து ஆந்திராவுக்கு கடத்தப்படுவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கொடுங்கையூர் எழில் நகர் எம்ஜிஆர் நகர் 5வது தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் திடீர் சோதனை செய்தனர். அங்கு கோணிப்பைகளில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கிருந்து 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்த போலீசார், அந்த வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த காமராஜ் 37 என்பவரை கைது செய்தனர். மேலும் இது குறித்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு  தகவல் தெரிவித்து 200 கிலோ அரிசி மற்றும் கைது செய்யப்பட்ட காமராஜை அவர்களிடம் ஒப்படைத்தனர் தொடர்ந்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்  காமராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Tags:    

Similar News