குழந்தைகளின் தபால்தலை சேகரிப்பை ஊக்குவிக்க இணையவழியிலான கோடைகால முகாம்

குழந்தைகளின் தபால்தலை சேகரிப்பை ஊக்குவிக்க இணையவழியிலான கோடைகால முகாமிற்கு சென்னை தலைமை தபால் நிலையம் ஏற்பாடு

Update: 2022-04-24 02:37 GMT

குழந்தைகளின் பொழுதுபோக்கான தபால்தலை சேகரிப்பை ஊக்குவிக்க இணையவழியிலான கோடைகால முகாமிற்கு சென்னை அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் ஏற்பாடு செய்துள்ளது.

குழந்தைகளின் பொழுதுபோக்கான தபால்தலை சேகரிப்பை ஊக்குவிக்க இணையவழியிலான கோடைகால முகாமிற்கு சென்னை அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் ஏற்பாடு செய்துள்ளது. அடுத்த மாதம் 2-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை காலை 10.30 மணி முதல் 12.45 மணி வரை 5 பிரிவுகளில் முகாம்கள் நடைபெற உள்ளன.

இதில் கலந்து கொள்வதற்கு முன்னதாக இம்மாதம் 25-ந் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இது தற்போது இம்மாதம் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ள 8 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 250 ரூபாய் பதிவு கட்டணமாக செலுத்தி இதில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு கட்டணத்தை காசோலையாகவோ, வரைவோலையாகவோ தலைமை தபால் அதிகாரி, அண்ணாசாலை தலைமை தபால் நிலையம், சென்னை- 600 002 என்ற பெயரில் எடுத்து விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தலைமை தபால் அதிகாரி, அண்ணாசாலை தலைமை தபால் நிலையம், சென்னை - 600 002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கோடை கால முகாமிற்கு பிறகு சான்றிதழ்கள் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்களை 044-28543199 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். இத்தகவலை சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலைய அதிகாரி முரளி வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News