சென்னையில் ஆன்லைன் பெட்டிங்கில் பல லட்சம் மோசடி: ஒருவர் கைது

ஆன்லைன் சூதாட்டம் மூலமாக இலட்சக் கணக்கில் ஏமாற்றிய ஹரிகிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-14 16:58 GMT

பைல் படம்.

சென்னை, சூளைமேடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர், ஆன்லைன் பெட்டிங்கிற்காக பணம் கட்டி சுமார் ரூ.87 லட்சத்தை இழந்து ஏமாந்துவிட்டதாக சென்னை, மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவில் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்ய, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் விசாரணையில், ஆன்லைனில் கேசினோ, லைவ் ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் இணையதளத்தில் விளையாடுவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் கட்ட வைத்து, பிறகு பெட்டிங்காக மாற்றி தொடர்ந்து விளையாட செய்து, ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாக்குவது தெரியவந்தது.

இதன்பேரில், சைபர் கிரைம் பிரிவு உதவி கமிஷனர் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, கீழ்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 193 கிராம் தங்க நகைகள், பணம் ரூ.24,68,300/-, 6 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள், 10 செல்போன்கள், 1 லேப்டாப், 1 ஐபேட் மற்றும் 1 கார் கைப்பற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News