'ஒருவரும் பசியால் வாடவில்லை என்ற நிலையை உருவாக்குங்கள்'- முதலமைச்சர்!

பசியால் ஒருவரும் வாடவில்லை என்கிற நிலையை உருவாக்குவதே தனக்கு அளிக்கும் வரவேற்பாக கருதுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-29 05:23 GMT

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு இன்று எழுதிய கடிதத்தில், கடந்த வார கால ஊரடங்கினால் தொற்றுநோய் எண்ணிக்கை ஓரளவு குறைந்து வருவதை காண்கிறோம். இது மேலும் குறைந்து, நோய்த் தொற்று வரைபடம் தட்டையான நிலையை எட்டிட வேண்டும் என்பதற்காக ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஆய்வுப் பணிக்காக கோவை செல்ல உள்ளதாகவும், அரசு முறைப் பயணம் என்பதால், திமுக நிர்வாகிகள் யாரும் தன்னை நேரிதல் வரவேற்பதற்கும், சந்திப்பதற்கும் ஆர்வம் காட்ட வேண்டாம்.

என்மீது தாங்கள் காட்டும் அன்பின் வரவேற்பு பதாகைகள் வாயிலாக வெளிப்படுத்த வேண்டாம். ஒருவார காலம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுளள் நிலையில், தமிழகம் தழுவிய அளவிலும் குறிப்பாக கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் உணவு வழங்கும் பணியை மேற்கொண்டு, தமிர்நாட்டில் ஒருவர் கூட பசியால் வாடவில்லை என்கிற நிலையை உருவாக்குங்கள்.

அதுவே எனக்கு அளிக்கப்படும் சிறப்பான வரவேற்பாக கருதுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News