முன்விரோதம் காரணமாக பெண்ணை தாக்கிய நபர் கைது

சென்னையில் முன்விரோதம் காரணமாக 32 வயதுடைய பெண்ணை தாக்கிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்;

Update: 2021-09-13 07:28 GMT

கிரீன்வேஸ் சாலை டாக்டர் ராதாகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவர்  தனியார் மருத்துவமனையில் பணியாளராக இருக்கிறார். இவருக்கும், இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் ராமு என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் தனலட்சுமியை அவதூறாக பேசி ராமு வீண் தகராறு செய்துள்ளார். அப்போது, தனலட்சுமியை, ராமு அடித்ததில் தனலட்சுமியின் இரண்டு பற்கள் உடைந்தன. இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து அப்பெண் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ராமுவை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News