சென்னை மெட்ரோ ரயில் கதவு இடுக்கில் சிக்கிய தாய்,குழந்தை: ஓட்டுனர் மீது பொதுமக்கள் பரபரப்பு புகார்
சென்னையில், மெட்ரோ ரயிலில் தானியங்கி கருவி கோளாறு காரணமாக கதவு இடுக்கில் தாயும், குழந்தையும் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.;
தலைநகர் சென்னையில் இயங்கி வரும் மெட்ரோ ரயில்.
சென்னையில், புது வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில், ரயிலின் கதவுகள் சரியாக இயங்காததால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். சென்னை புது வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில், ரயிலின் கதவுகள் சரியாக இயங்கவில்லை. இதனால், உயர்நீதிமன்ற நிறுத்தத்தில் பெண் ஒருவர் ரயிலில் ஏறியுள்ளார்.
அப்போது, தானியங்கி கதவுகள் மூடியதால், தன் குழந்தையோடு கதவுகளுக்கு இடையே மாட்டிக்கொண்டதாக தகவல் பரவியது. இதுதொடர்பாக, மெட்ரோ ரயில் ஓட்டுநரிடம் பொதுமக்கள் தெரிவித்தபோது, அவர் அலட்சியம் காட்டியதாகவும் கூறப்படுகிறது. இதை கண்டித்தும், ஓட்டுனர் மீது புகார் கூறியும் பொதுமக்கள், புது வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.