பேரவையில் எம்எல்ஏக்கள் அமரும் இடம், முடிவு செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கு மட்டுமே

சட்டபேரவையில் எம்எல்ஏக்கள் அமரும் இடத்தை முடிவு செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கு மட்டுமே உள்ளது என உயர் நீதி மன்றம் கூறியது.

Update: 2021-09-02 07:04 GMT

சென்னை உயர்நீதி மன்றம் ( பைல் படம்)

திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்எல்ஏக்களை எதிர்க்கட்சி உறுப்பினர்களாக கருதக் கூடாது என்று கோவையை சேர்ந்த லோகநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கூறிய நீதிபதி, சட்டப்பேரவையில் சட்டமன்ற எம்.எல்.ஏ.க்களை எங்கு எப்படி அமர வைக்க வேண்டும் என்பது குறித்து சபாநாயகருக்கு மட்டும்தான் முடிவெடுக்க அதிகாரம் உள்ளது

அதில் நீதிமன்றம் தலையிட்டு எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது, சபாநாயகர் கடைபிடிக்கும் நடைமுறைகள் சரியானதாகதான் இருக்கும் என்றும் கருத்து தெரிவித்து, நீதிபதி லோகநாதனின் மனுவை தள்ளுபடி செய்தார்.

Tags:    

Similar News