மேகதாது அணை விவகாரம், அனைத்துக் கட்சி கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் 12ம் தேி நடைபெறுகிறது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2021-07-09 07:45 GMT

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ( பைல் படம்)

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் 12ம் தேி நடைபெறுகிறது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

மேகதாது குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசு தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாது பகுதியில் கட்டாயம் அணை கட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தொடர்ந்து கூறி வருகிறார்.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

மேகதாது குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசு தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருந்த போதிலும் மேகதாது பகுதியில் கட்டாயம் அணை கட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கூறி வருகிறார்.

இதுதொடர்பாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் டில்லி சென்று, மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.

அணையை கட்ட கர்நாடக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எதிர்க்கும் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறியிருந்தார்.

இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

12ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News