சென்னை மாநகராட்சி பட்ஜெட்: பள்ளி மாணவர்களுக்கு கலர் ஐடி கார்டு, மேயர் அறிவிப்பு

Update: 2024-02-21 08:29 GMT

சென்னை மாநகராட்சியின் மேயராக பதவியேற்ற ஆர்.பிரியா குறுகிய காலகட்டத்திலேயே 2022-2023 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை 2022 ஏப்ரலில் தாக்கல் செய்தார்

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிதியாண்டுக்கான பட்ஜெட் ரூ 340.25 கோடி பற்றாக்குறையுடன் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் 27 திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

சென்னை மாநகராட்சிக்கான 2024 - 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது

சென்னை மாநகராட்சியின் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ரிப்பன் கட்டடத்தில் உள்ள கூட்ட அரங்கில் மேயர் ஆர்.பிரியா இன்று தாக்கல் செய்தார்.

பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது: தொழிற்பயிற்சி நிலையத்தை மேம்படுத்த புதிய பொருட்கள் வாங்குவதற்கு ரூ 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அது போல் மாநகராட்சி பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்து செல்ல ரூ 47 லட்சம் நிதியும் வண்ண அடையாள அட்டைகளை வழங்க ரூ 61 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 82 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

  • மாநகராட்சி பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ 45 லட்சம் ஒதுக்கீடு.
  • எல்கேஜி முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தலா 2 சீருடை வழங்க ரூ. 8.50 கோடி ஒதுக்கீடு.
  • 255 பள்ளிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ரூ.7.46 கோடி ஒதுக்கீடு.
  • சென்னை பள்ளி மாணவர்களுக்கு காலணிகள் வழங்கப்படும். இதற்காக ரூ.3.59 கோடி ஒதுக்கீடு.
  • பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்க ரூ.61 லட்சம் ஒதுக்கீடு.
  • சென்னை ராயப்பேட்டையில் மாநகராட்சியின் கீழ் செயல்படும் தொழிற்பயிற்சி நிலையத்தை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கீடு.
  • 419 சென்னை பள்ளிகளில் உடனடி பழுது பார்க்கும் வகையில் ரூ.1.32 கோடி நிதி ஒதுக்கீடு.
  • திறமைமிக்க மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு STEM பயிற்சி வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு.
  • 338 பள்ளிகளுக்கு ஐந்து பச்சை வண்ண பலகைகளை வழங்க ரூ.92.95 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • சைதாப்பேட்டை மருத்துவமனையில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த ரூ.7 கோடி ஒதுக்கீடு.
  • சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கு பிரத்யேக உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்படும். இதற்காக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு.
  • சென்னையில் 8 நீர்நிலைகளை ரூ.10 கோடி செலவில் புனரமைக்க திட்டம்.
  • வார்டு உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.45 லட்சமாக வழங்கப்படுகிறது.
  • 200 வார்டு உறுப்பினர்களுக்கும் டேப் கணினி வழங்கப்படும். இதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு
  • சுகாதார துறையில் பரிசோதனை கூடம் கொசு ஒழிப்புக்காக நடவடிக்கைக்காக புகை பரப்பும் இயந்திரங்கள் கொள்முதல் செய்வதற்காக 2024-25ம் ஆண்டில் ரூ.3.75 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • கல்வி துறையை பொறுத்தமட்டில் பள்ளிகளுக்கு மேஜைகள், கணினிகள் மற்றும் அதுசார்ந்த துணை உபகரணங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் வழங்குவதற்காக ரூ.5.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\
  • சென்னையில் துப்புரவு பணிக்கு தேவையான வாகன கொள்முதல் செய்ய ஏதுவாக 2024-25 ம் ஆண்டில் ரூ.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
Tags:    

Similar News