அமைச்சர் மெய்யநாதனை சந்தித்து வாழ்த்து பெற்றார் மாரியப்பன் தங்கவேலு
அமைச்சர் மெய்யநாதனை, டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு சந்தித்து வாழ்த்து பெற்றார்.;
இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனை, டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
உடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வவர்மா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் உறுப்பினர் செயலர் ரமேஷ் சந்த் மீனா, இந்திய பாராலிம்பிக் தடகள அணித்தலைவர் கிருபாகர்ராஜா, தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டு சங்கச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் இருந்தனர்.