சமூக நீதிக்கான போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு மணி மண்டபம்: முதலமைச்சர் அறிவிப்பு

விழுப்புரத்தில் சமூக நீதிக்கான போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

Update: 2021-09-02 06:30 GMT

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ( பைல் படம்)

தமிழக சட்ட பேரவையின்  இன்றைய கூட்டம்  காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்கியது. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

விழுப்புரத்தில் சமூக நீதிக்கான போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு மணிமண்டபம்  ரூ 4 கோடியில் கட்டப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை காக்கப்பட வேண்டும் என்பதே திராவிட கொள்கை என்றும் போராட்டத்தில் உயிரிழந்த 21 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு தகுதிகேற்ப அரசு பணி வழங்கப்படும் என்றும்  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News