ஜாதிரீதியாக திட்டியதாக அமைச்சர் பெஞ்சமின் மீது புகார்
மதுரவாயலில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தகாத வார்த்தைகளால் அமைச்சர் பெஞ்சமின் திட்டியதாக புகார் எழுந்துள்ளது.
அமைச்சர் பெஞ்சமின் மதுரவாயல் தொகுதியில் போட்டியிடுகிறார். எம்ஜிஆர் ஆதர்ஷ் பள்ளி அருகே வாக்களிக்க சென்ற போது தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டதாக சிலர் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தனர்.
புகார் அளித்த நபரை ரோட்டில், அமைச்சர் பெஞ்சமின் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ள வீடியோ காட்சியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
92வது வார்டில் வாக்களிக்க வந்த மக்களை சாதிரீதியாக பெஞ்சமின் திட்டியதாக குற்றம்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. தகாத வார்த்தையில் அமைச்சர் பேசுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.