நீதி மன்ற உத்தரவின்படி நகர்ப் புற உள்ளாட்சித் தேர்தல் தேதி: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

தமிழக நகர்ப் புற உள்ளாட்சித் தேர்தல் தேதி நீதி மன்ற உத்தரவின்படி அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

Update: 2021-09-04 04:28 GMT

அமைச்சர் கே.என்.நேரு

அமைச்சர் கே.என்.நேரு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.

டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. நீதிமன்ற உத்தரவை பொறுத்து தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படும்.

பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. வார்டு வரையறை உள்ளிட்ட பணிகள் நிறைவடையாமல் உள்ளது. வார்டு வரையறை பணிகளை தேர்தல் ஆணையம் துரிதமாக செய்து வருகிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News