திருவிக நகரில் கத்தியுடன் ஆட்டோவில் சுற்றிய பழைய குற்றவாளிகள் 2 பேர் கைது

திருவிக நகரில் கத்தியுடன் ஆட்டோவில் சுற்றிய பழைய குற்றாவாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-12-05 07:19 GMT

பைல் படம்

சென்னை திருவிக நகர் பல்லவன் சாலை பகுதியில் திருவிக நகர் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பெரம்பூர் பகுதியில் இருந்து வந்த ஒரு ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அந்த ஆட்டோவில் இரண்டு அடி நீளமுள்ள கத்தி மற்றும் பூட்டுக்களை திறக்க பயன்படுத்தப்படும் கட்டர் எனப்படும் கருவி உள்ளிட்ட பொருட்கள் இருந்தன.

இதனை அடுத்து சந்தேகமடைந்த போலீசார் ஆட்டோவில் இருந்த இரண்டு பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் ஒருவர் புளியந்தோப்பு ஆடுதொட்டி ஏழாவது பள்ளத்தெரு பகுதியைச் சேர்ந்த சூர்யா என்கின்ற பெண்டு சூர்யா வயது 20 என்பதும் இவர் மீது மாதவரம் அயனாவரம் கண்ணகி நகர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

மற்றொரு நபர் திருவள்ளூர் மாவட்டம் நெமிலிச்சேரி பகுதியைச் சேர்ந்த மோகன் வயது 19 என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் மூலக்கடை செல்வதற்காக ஆட்டோவில் சவாரி ஏறி சென்றபோது போலீசாரிடம் பிடிபட்டனர்

போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட சூர்யா என்பவரின் தம்பியான மோகன் என்பவர் கொடுங்கையூரில் ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டதும் அதற்காக இவர்கள் இருவரும் கத்தியுடன் பஞ்சாயத்து செய்ய சென்றதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.  இதனையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த திருவிக நகர் போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News