பெரம்பூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

பெரம்பூரில், கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2021-12-14 10:59 GMT

தமிழ் நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பெரம்பூரில் சாலை மறியல் நடைபெற்றது

திமுக தேர்தல் அறிக்கையில்,  திமுக ஆட்சிக்கு வந்ததும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை மூன்றாயிரம் ரூபாயாகவும், கடும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.  எனினும், இதுவரை இந்த வாக்குறுதி  நிறைவேற்றப்படவில்லை. 

இந்நிலையில்‌ தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி,  தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் இன்று சாலை மறியல் நடைபெற்றது.

அதன் ஒருபகுதியாக, சென்னை  கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பிருந்தா திரையரங்கம் எதிரில்,  100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்பாட்டம் செய்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.  போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்து, மாநகராட்சி சமுதாயக்கூடத்தில் அடைத்தனர். 

Tags:    

Similar News