கொளத்தூரில் மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து உறுதிமொழி
கொளத்தூரில் குடியரசு தினத்தில் மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் சிஐடியு சார்பில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் இன்று 73 வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசின் பல்வேறு தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரவள்ளூர் சந்திப்பில் உள்ள காமராஜர் சிலை முன்பு சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
சிஐடியு கொளத்தூர் தொகுதி ஒருங்கிணைப்பாளர் கோட்டீஸ்வரன் தலைமை வகித்தார். இதில் மத்திய அரசுக்கு எதிரான உறுதிமொழிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது மின்சார திருத்தச்சட்டம் 2021 கைவிடவேண்டும் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசு செயல்படுவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது இதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..