கொளத்தூரில் தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்
கொளத்தூரில் தீவிரத் தூய்மைப்படுத்தும் பணியின் கீழ் மாநகராட்சி பள்ளிகள் மற்றும் மயானங்கள் துய்மை படுத்தப்பட்டன.
சென்னையில் கடந்த 1ஆம் தேதி முதல் இந்த மாதம் முடிய அனைத்து நாட்களிலும் தீவிர தூய்மைப்படுத்தும் பணியில் கீழ் ஒவ்வொரு பகுதியாக மாநகராட்சி அதிகாரிகள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப்படுத்த வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.
இதனை அடுத்து ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் குப்பை கொட்டும் இடங்கள் தெருக்கள் மாநகராட்சி கட்டிடங்கள் என அனைத்தும் தீவிர தூய்மைப்படுத்தும் பணியின் கீழ் சுத்தப்படுத்தப்பட்டன.
அந்த வகையில் இன்று கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் உள்ள மாநகராட்சி பள்ளிகள் மற்றும் மயானங்களில் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
சென்னை திருவிக நகர் 6வது மண்டல செயற்பொறியாளர் செந்தில்நாதன் மற்றும் உதவி செயற்பொறியாளர் பாபு உதவி பொறியாளர் சிவப்பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் இன்று காலை கொளத்தூர் 67வது வார்டுக்கு உட்பட்ட சோமய்யா ராஜா பள்ளி மற்றும் அதனை சுற்றி உள்ள மாநகராட்சி பள்ளிகள் மற்றும் ஜி கே எம் காலனி ரயில்வே கால்வாய் பகுதி. நேர்மை நகர் மயானம். பெரம்பூர் பி.பி சாலையில் ஒரு மயானம் உள்ளிட்ட பல பகுதிகளை மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்களை கொண்டு தீவிரமாக சுத்தம் செய்தனர்.
மேலும் மாநகராட்சி பள்ளிகளில் உள்ள கழிவறைகளையும் சுத்தம் செய்தனர். தொடர்ந்து இந்த மாத இறுதி வரை தீவிர தூய்மைப்படுத்தும் பணிகள் தொடரும் என மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.