கொளத்தூரில் சைவ சித்தாந்த வகுப்புகள் அறநிலையத்துறை சார்பில் துவக்கம்

கொளத்தூர் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சைவ சித்தாந்த வகுப்புகள் துவங்கப்பட்டது.

Update: 2021-12-03 05:45 GMT

கொளத்தூர் கபாலீசுவரர் கலை அறிவியல் கல்லூரியில் சைவ சித்தாந்த வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.

அறநிலைய துறை சார்பில் தமிழகத்தில் புதிதாக 4 கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு முதலாவதாக சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் எவர்வின் தனியார் பள்ளி கட்டிடத்தில் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டு மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். 

இந்தக் கல்லூரியில் இன்று சைவ சித்தாந்த வகுப்புகள் தொடங்கப்பட்டன இதனை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பிகே சேகர்பாபு துவக்கிவைத்தார். பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் வயது வரம்பின்றி இதில் சேரலாம் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விண்ணப்பக் கட்டணம் இன்றி இலவசமாக சான்றிதழ் படிப்பிற்காக  இந்தப் பாடப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாகவும். இதன் கட்டணம் அனைத்தையும் கல்லூரியே ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சைவசித்தாந்தம் குறித்து படிக்க முதற்கட்டமாக 100 பேர் விண்ணப்பித்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சேகர்பாபு 

கொளத்தூரில் தொடங்கப்பட்டுள்ள இந்த கல்லூரியில் 224 மாணவச் செல்வங்கள் கல்வி கற்பதற்க்கும் அதேபோல் சைவசித்தாந்தம் சான்றிதழ் வகுப்பு துவங்குவதற்கும் முறையாகக் கல்வி பயில்வதற்க்கு ஆட்சி பொறுப்பேற்ற ஆறு மாதத்திற்குள்ளாக  முதற்கட்டமாக கல்வியைத் தந்த தமிழக முதல்வருக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும்

தமிழகத்தில்தான் நல்ல பல பணிகளுக்கு இடையூறுகள் எழுகின்ற ஒரு சூழ்நிலை நிலவி வருகிறது இந்தக் கல்லூரிகள் அமைவதற்கு பல தொந்தரவுகள் வந்தபோதிலும் இந்த தொந்தரவை எல்லாம் தாண்டி இந்த கல்லூரி இங்கே அமையப் பெற்றது என்றால் அதற்கு முழு காரணம் எல்லா தடைகற்களையும் படிக்கற்களாக மாற்றிய பெருமை தமிழக முதல்வரையே சாரும்.

நீதியரசர்கள் என்னென்ன வழிகாட்டு நெறிமுறைகளை கூறியுள்ளார்களோ அதையெல்லாம் பின்பற்றி இந்த கல்லூரியை நடத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு அடுத்த ஆண்டு இந்த கல்லூரியில் தற்போது உள்ள 224 என்ற மாணவர்களின் எண்ணிக்கையை ஆயிரம் மாணவர்கள் என்று உயர்த்த உள்ளதாகவும் 

இனி வரும் காலங்களில் இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு அனைத்து வகையான உதவிகளையும்  செய்வதாக தமிழக முதல்வர் உறுதி அளித்துள்ளதாகவும் இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த சைவ சித்தாந்த சான்றிதழ் வகுப்புகளை மாணவ  மாணவிகள் முறையாக பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் வளம்பெற வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை செயலாளர் சந்திரமோகன். ஆணையர் குமரகுருபரன். வைணவ கல்லூரி முதல்வர் சந்தோஷ் பாபு. இந்து சமய அறநிலை துறை இணை ஆணையர் காவேரி.

எவர்வின் குழுமத் தலைவர் புருஷோத்தமன். சென்னை பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறை தலைவர் முனைவர் சரவணன். கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சக்கரவர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News