கொளத்தூரில் கடன் பிரச்சனையில் கணவன் மனைவி தற்கொலை
கொளத்தூரில் கடன் பிரச்சனையில் கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.;
பைல் படம்
சென்னை கொளத்தூர் பாலாஜி நகர் 5வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (62). தனியார் கம்பெனியில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பாரதி (59) கடந்த 7 வருடங்களாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு பாக்கியலட்சுமி (40) என்ற மகளும் தினேஷ் (35) என்ற மகனும் உள்ளனர். பாக்கியலட்சுமி பிரகாஷ் என்பவருடன் திருமணமாகி பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார். தினேஷ் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பாக்கியலட்சுமியின் 18 வயது மகளுக்கு சென்னை கல்லூரியில் சேர்ப்பதற்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு இவர்களுக்குள் பணம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடன் தொல்லை அதிகமாக இருந்துள்ளதாக தெரிகிறது. வேலைக்கு சென்றிருந்த பாக்கியலட்சுமியின் கணவர் பிரகாஷ் இன்று அதிகாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது கோவிந்தராஜூம் பாரதியும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
மேலும் பாக்யலக்ஷ்மி தனது தாலி செயினை வீட்டில் கழட்டி வைத்துவிட்டு தினேஷு டன் அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். தகவலறிந்த கொளத்தூர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டை விட்டு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்ற இருவர் என்ன ஆனார்கள் எங்கு சென்றார்கள் என்ற விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் கடன் தொல்லையால் மூத்த தம்பதியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொளத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.