தமிழக முன்னாள் போலீஸ் ஐ.ஜி.சுப்பையா ஐ.பி.எஸ்.காலமானார்
தமிழக முன்னாள் சட்டம் ஒழுங்கு போலீஸ் ஐ.ஜி. சுப்பையா ஐ.பி.எஸ். காலமானார்;
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் பிறந்தவர் கே.சுப்பையா ஐ.பிஎ.ஸ்.இவர் இளமைப் பருவத்தில் நல்ல கல்வி பின்புலமும் விவசாய பின்புலமும் கொண்ட குடும்பத்தில் வளர்ந்தவர்.
தமிழக காவல்துறையில் கால்பதித்து முதன்முதலில் மாயவரத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக தனது அரசுப்பணியை 1978 ல் துவக்கினார். அதன்பின் சென்னை செம்பியத்தில் காவல்துறை உதவி ஆணையராகவும் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஐந்து வருடம் காவல்துறை கண்காணிப்பாளராகவும் அதன்பின் சி.எஸ்.எப்.பிலும் பணியாற்றிய இவர் தனது நேர்மையான பணியையும் துணிச்சலையும் வைத்து திருச்சி சரக டிஐஜி யாக 1994 ல் நியமிக்கப்பட்டார்.
அதன்பின் தென்னக இரயில்வே ஐஜி யாகவும் பணியாற்றிய இவர் இறுதியில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு ஐ.ஜி. யாக திறம்பட பணியாற்றி மக்கள் மத்தியில் மிகுந்த நன்மதிப்பையும் வரவேற்பையும் பேரும் புகழையும் பெற்ற இவர் கடந்த 2002 ல் தனது அரசு காவல்துறை பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.26.02.2022 அன்று இரவு 7.30 மணியளவில் சுப்பையா மரணம் அடைந்தார்.