கொளத்தூர் தொகுதியில் அரசு பள்ளியில் மழலையர் வகுப்பை தொடக்கி வைத்த துர்கா ஸ்டாலின்
கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஜி. கே. எம். காலனி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இன்று மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டன;
கொளத்தூர் தொகுதியில் அரசுப் பள்ளியில் மழலையர் வகுப்பினை முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஜி. கே. எம். காலனி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இன்று மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதனை தமிழக முதல்வரும் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான மு. க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அவரது மகள் செந்தாமரை உள்ளிட்டோர் பள்ளிக்கு வருகை தந்து மழலையர் வகுப்பினை தொடக்கி வைத்தனர். பள்ளிக்கு வருகை தந்த அனைவருக்கு குழந்தைகள் வரிசையில் நின்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஷ், .மாவட்ட கல்வி அலுவலர் கற்பகம் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்..