கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு நல திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2021-12-10 10:09 GMT

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து நல திடட உதவிகளை வழங்கினார்.

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கொளத்தூர் தொகுதியில் சபாபதி தெருவில் கடந்த 23ம் தேதி பெய்த மழை காரணமாக அடுக்கு மாடி குடியிருப்பின் முதங் தள சுவர் இடிந்து 3பேர் காயமடைந்தனர். அந்த பகுதியல் ஆய்வு செய்த முதலமைச்சர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நலம் விசாரித்தார்.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், லலிதா - நவீன்குமார் தம்பதியின் ஆண் குழந்தைக்கு மலர்வன் என முதலமைச்சர் பெயர் சூட்டினார். அந்த பகுதியில் இருந்த மனநலம் குன்றிய பள்ளி மாணவர்களை முதலமைச்சர் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், வெங்கடேஷ்வரா நகர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி, கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.

அங்கிருந்து புறப்பட்ட முநலமைச்சர் மு. க.ஸ்டாலின் வள்ளியம்மாள் தெருவில் நடந்து சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர், லஷ்மணன் நகர் பகுதியில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவாரண பொருட்கள் வழங்கினார்.

இதனை தொடர்ந்து, ஜிகேஎம் காலனி பகுதியில் மழை வெள்ள பாதிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்த முதலமைச்சர், மழை நீர் தேங்காமல் இருப்பதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள், மழை நீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அங்கிருந்து செல்லும் பொழுது, காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. விரைவில் வழங்க ஏஏற்பாடு செய்கிறேன் என முதலமைச்சர் மு. க. ஸ்டாஙின் உறுதியளித்தார். 

பின்னர், அக்பர் சதுக்கம் பகுதியில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்பொழுது அந்த பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் இருந்த தீபக் - குலோரி என்ற மணமக்கள் சாலையில் வந்து காத்திருந்து முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர்.

இதனை தொடர்ந்து ஜெய்ராம் நகர் பகுதியில் ஆய்வு செய்த முதலமைச்சர் நிவாரண பொருட்களை வழங்கி கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பிகே சேகர்பாபு சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி. சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News