சென்னையில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் வருமானவரித்துறை ரெய்டு

சென்னையில் பிரபலமான, சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.;

Update: 2021-12-01 04:30 GMT

மாதிரி படம்

சென்னையில் தி. நகர், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள், மிகவும் பிரபலமானது. எனினும், இந்த நிறுவனத்தின் கடைகளில் வரி ஏய்ப்பு நடப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுவதுண்டு. கடந்த 2019ஆம் ஆண்டில், சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர்.

இந்த சூழலில், சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில், இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தி. நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூரில் உள்ள, இந்த நிறுவனத்தின் கடைகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இது குறித்த முழுவிவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 

Tags:    

Similar News