common mobility card சிங்காரச் சென்னை கார்டு பயன்படுத்துவது எப்படி?

பஸ், ரயில், மெட்ரோவுக்கு ஒரே கார்டு எப்படி பயன்படுத்துவது என்பதை இந்த பதிவில் காண்போம்

Update: 2023-04-17 13:00 GMT

ஒரே ஒரு கார்டு. அதை பயன்படுத்தி நீங்கள் மெட்ரோ ரயிலிலும் பயணிக்கலாம், லோக்கல் ரயிலிலும் பயணிக்கலாம். பேருந்திலும் பயணிக்கலாம். இந்த அட்டையின் பெயர் சிங்காரச் சென்னை அட்டை. ஒரே நகரம் ஒரே அட்டை. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் துணையுடன் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது.

Rudhran review ருத்ரன் படம் எப்படி இருக்கு?

சென்னை வாசிகள் மிக எளிமையாக சென்னை மாநகருக்குள் பயணம் மேற்கொள்ள சிங்காரச் சென்னை எனும் பெயரில் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்துக்கான அட்டை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இனி வரிசையில் நின்று பயணச் சீட்டு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பேருந்துகளில் இடித்து நெருக்கிக் கொண்டு நடத்துநரைத் தேடி பயணச் சீட்டு எடுக்க வேண்டிய தேவை இல்லை.

இப்போதைக்கு இந்த அட்டையின் மூலம் மெட்ரோவில் மட்டும் பயணிக்க முடியும். நாளடைவில் இது லோக்கல் டிரெய்ன்கள் மற்றும் பேருந்துகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். அதன்பிறகு இந்த அட்டையைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் அனைத்து வகையான போக்குவரத்திலும் பயணிக்க முடியும்.

Guru peyarchi palan 2023 குரு பெயர்ச்சி 2023 எப்போது?

புறநகர் ரயில்களில் இந்த திட்டம் அடுத்த இரண்டு மாதங்களிலும் பேருந்துகளில் அடுத்த 10 மாதங்களிலும் இந்த திட்டம் விரிவு செய்யப்படும்.

கோயம்பேடு, சென்ட்ரல் ஸ்டேஷன், விமான நிலையம், உயர்நீதிமன்றம், ஆலந்தூர், திருமங்கலம், கிண்டி ஆகிய இடங்களில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வழங்கும் என்சிஎம்சி கார்டு, அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களின் தானியங்கி வாயில்களிலும் பயன்படுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிப்படியான செயல்முறைகள்

படி 1 : இந்த அட்டையை முதலில் இலவசமாகவோ அல்லது குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தியோ வாங்கிக் கொள்ள வேண்டும். அது நம்முடைய ஏடிஎம் கார்டு மாதிரி இருக்கும். டெபிட் கார்டு மாதிரி இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும்

படி 2 : இந்த அட்டையில் குறிப்பிட்ட பணம் செலவழிந்தவுடன், உங்களுக்கு தேவையான அளவுக்கு 500, 1000 ரூ என ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும். ரீசார்ஜ் எப்படி செய்வது என்பது குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும். இப்போதைக்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் இதற்கான கவுண்டர்கள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

shakuntalam review சாகுந்தலம் படம் எப்படி இருக்கு?

படி 3 : நீங்கள் மெட்ரோ, லோக்கல் ரயில், பேருந்துகளில் பயணிக்கும்போது அங்கு ஸ்வைப்பிங் மெஷின் ஒன்று இருக்கும். அதில் ஸ்வைப் செய்துவிட்டால் உங்களுக்கான பயண கட்டணம் பிடித்தம் செய்யப்படும். அது இப்போதுள்ள முறையிலேயே இந்த தொலைவுக்கு இந்த கட்டணம் என்றவாறே அமையும்.

படி 4 : நீங்கள் பயணம் செய்ய வேண்டிய இடம் வந்ததும் நீங்கள் இறங்கிக் கொள்ளலாம். இதில் பல குழப்பங்கள் இருக்கலாம் ஆனால் விரைவில் இதுகுறித்த தெளிவான விளக்கம் அளிக்கப்படும் என்கிறார்கள். 

Tags:    

Similar News