இந்து சமய அறநிலையத்துறை வேலை: 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளது. இந்த பணிகளுக்கு 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது.;
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையில், நகை மதிப்பீட்டுக் குழுவில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதில் 20 பணியிடங்கள் உள்ளன. தகுதியுள்ளவர்கள் 17.11.2021க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவித்துள்ளது.
பணியின் பெயர் : இளநிலை தொழில்நுட்ப உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 20
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் நகை மதிப்பிடுதலில் 5 ஆண்டுகள் அனுபவம் வேண்டும்.
வயது வரம்பு : 01.07.2021 அன்று 28 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.35,400 – 1,12,400
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/87/document_1.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, 119 உத்தமர் காந்தி சாலை, சென்னை – 600034.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.11.2021
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/87/document_1.pdf என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.