தமிழக அரசின் வேலை வாய்ப்பு : டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது;

Update: 2021-10-27 11:43 GMT

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் பணியிடம்

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம். இந்த கழகம் 1949ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் தொழில் மேம்பாட்டுக்காக நிறுவப்பட்ட முதன்மையான மாநில அரசின் நிதிக்கழகமாகும்.

தொழில் தொடங்குவதற்குத் தேவையான நிலையான சொத்துக்களைப் பெறுவதற்கு தேவையான நிதியுதவியை இக்கழகம் அளிக்கிறது. மேலும் புதிய தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்கும், ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், நவீனமயமாக்குவதற்கும் இக்கழகம் நிதியுதவி அளிக்கிறது.

தற்போது, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 07.11.2021.

மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் பணி

வயதுத் வரம்பு : 01.07.2021 அன்று 21 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

அனுபவம் : நிதி சார்ந்த தயாரிப்புகள் அல்லது சேவையில் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ.25,000 + படிகள்

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

விண்ணப்பக் கட்டணம் : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://tiic.co.in/mktg_recruitment என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.11.2021

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.tiic.org/wp-content/uploads/2021/10/Marketing-Executive_Systems-converted-1.pdf என்ற இணைய தளப் பக்கத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.





Tags:    

Similar News