ஜனவரி 17ம் தேதி அரசு விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் ஜனவரி 17ம் தேதி அரசு விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.;
பொங்கல் மற்றும் தைப்பூசத்திற்கு இடைப்பட்ட நாளான ஜனவரி 17ம் தேதி விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினத்தை ஈடுசெய்ய ஜனவரி 29ம் தேதி ( சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 16-ஆம் தேதியும், தைப்பூசத்திற்காக ஜனவரி 18-ஆம் தேதியும் ஏற்கெனவே விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இடைப்பட்ட நாளான ஜனவரி 17-ஆம் தேதியையும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க அரசு பணியாளர் சங்கங்கம் கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து அவர்களது கோரிக்கையை பரிசீலனை செய்து ஏற்று அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு ஜனவரி 17ம் தேதி விடுமுறை என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.