விமானத்தில் தங்கம் கடத்தல்: இருவர் கைது

கடத்தி வரப்பட்ட, ரூ.12 லட்சம் மதிப்புடைய 255 கிராம் தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2021-04-06 03:54 GMT

துபாயிலிருந்து ஏா்இந்தியா சிறப்பு விமானம் இன்று காலை சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது ராமநாதபுரத்தை சோ்ந்த சாகுபா் அலி(32), முகமது ஜபீா்(24) ஆகிய இரு பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவா்களை நிறுத்தி சோதனையிட்டனா்.

சோதனையின் போது அவா்களின் உள்ளாடைகளுக்குள் ரூ.12 லட்சம் மதிப்புடைய 255 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனா். அதோடு இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags:    

Similar News