ரூ.2.01 கோடி மதிப்புள்ள 4.171 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்: 2 பேர் கைது

ரூ.2.01 கோடி மதிப்புள்ள 4.171 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை பறிமுதல் செய்ததுடன், 2 பேர் கைது செய்யப்பட்டனர்;

Update: 2022-04-12 16:39 GMT

ரகசிய புலனாய்வு தகவலின் அடிப்படையில், துபாயிலிருந்து விமானத்தில் வந்த ஐந்து பயணிகள் மற்றும் மற்றொரு விமானத்தில் வந்த இரண்டு பயணிகளை சுங்கத்துறையின் விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் இடைமறித்து சோதனையிட்டனர். முதல் நிகர்வில் 2.493 கிலோ எடை கொண்ட 24 காரட் தங்க கட்டிகள் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1.20 கோடி ஆகும். இந்த தங்கத்தை பறிமுதல் செய்ததுடன் பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இரண்டாவது நிகழ்வில் கொழும்புவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த 12 பயணிகளிடமிருந்து ரூ.48 லட்சம் மதிப்புள்ள 992 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிகழ்வுகள் நேற்று நடைபெற்ற நிலையில், இன்று அதிகாலை துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவரை சோதனையிட்டதில் 686 கிராம் எடை கொண்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 33.05 லட்சம். அந்த பயணி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News