வடசென்னையில் போலி வணிக கணக்குகள் முடக்கம்: வணிக வரி ஆணையர் நடவடிக்கை
வடசென்னையில் நடைபெற்ற இரும்பு வணிகத்தில் ரூபாய் 2.19 கோடி அளவுக்கு உள்ளீட்டு வரிவரவை துய்த்தது தெரிய வந்தது.
சென்னையில் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் கீழ் இணை ஆணையர், சென்னை நுண்ணறிவுப் பிரிவு -1 ன் மேற்பார்வையில்ஆய்வு நடைபெற்றது.
இந்த ஆய்வின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் சில போலி வணிகர்கள் மூலம் வடசென்னையில் வணிகம் செய்து வரும் இரும்பு வணிகம் செய்தவர்கள் ரூபாய் 2.19 கோடி அளவுக்கு உள்ளீட்டு வரிவரவை துய்த்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து அவர்களது 9 வங்கிக் கணக்குகள் வணிகவரித் துறையால் கண்டறியப்பட்டு அக்கணக்குகளை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வணிக வரி ஆணையரால், சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் பிரிவு-83ன் கீழ் தற்காலிக முடக்கம் செய்யப்பட்டது.
மேலும், வணிகர்கள் விசாரணை தொடர்ந்து யாராயினும் போலி வணிகர்களிடமிருந்து உள்ளீட்டு வரிவரவு பெற்றது தெரியவந்தால் சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என வணிக வரித்துறை எச்சரித்துள்ளது.