சென்னை தியாகராயர் நகரில் செயல்படும் சரவணா ஸ்டோர் நகைக்கடை மீது மோசடி வழக்கு
பெண் மருத்துவர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை தியாகராயர் நகரில் செயல்படும் சரவணா ஸ்டோர் நகைக்கடை மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;
பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை தியாகராயர் நகரில் செயல்படும் சரவணா ஸ்டோர் நகைக்கடை மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை தியாகராயர் நகரில் செயல்படும் சரவணா ஸ்டோர் நகைக்கடை மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் இரு பிரிவுகளின் கீழ் மாம்பலம் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. சென்னை ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த பெண் மருத்துவர் கடந்த 2015 ம் ஆண்டு வாங்கிய 3 சவரன் வளையல் கருத்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் 2016 ம் ஆண்டு வாங்கிய 3 சவரன் தங்க சங்கிலியும் சமீபத்தில் உடைந்துள்ளது. செயினில் வெள்ளி கம்பி இருந்ததாகவும் பெண் மருத்துவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா விதிமுறைகளை மீறியதாக சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோருக்கு ரூ.5 இலட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. விற்பனையை அதிகரிக்க அளவுக்கு அதிகமான வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதித்தாக எழுந்த குற்றச்சாட்டில் சரவணா ஸ்டோருக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.