தலைமை செயலக பூங்காவில் தானியங்கி விளக்குகளுடன் கூடிய நீரூற்றுகள்

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் தலைமை செயலக பூங்காவில் தானியங்கி விளக்குகளுடன் கூடிய நீரூற்றுகள் நிறுவப்பட்டுள்ளன.;

Update: 2022-02-14 12:30 GMT

தலைமை செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி விளக்குகளுடன் கூடிய நீரூற்றுகள்

சென்னை மாநகரம் முழுவதும் செயற்கை நீரூற்றுகளை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்திருந்தது.

சிங்கார சென்னை முயற்சியின் ஒரு பகுதியாக தலைமை செயலக பூங்காவில் தானியங்கி விளக்குகளுடன் கூடிய  நீரூற்றுகள் நிறுவப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 26 இடங்களில் செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்படும். நகரின் முக்கிய போக்குவரத்து தீவுகள் மற்றும் மேம்பாலங்களின் கீழ் உள்ள காலி இடங்கள் மேம்படுத்தப்படும் என்று கூறினார்.

சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ. 2021-2022 ஆம் ஆண்டிற்காக மாநில அரசு 500 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் ரூ. 39.39 கோடி ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சமீபத்திய அரசு ஆணையின் படி ரூ. 1.29 கோடி செலவில் நீரூற்றுகள், பூங்காக்கள் மேம்பாட்டுக்கு ரூ. 24.42 கோடி,  விளையாட்டு மைதான மேம்பாட்டிற்கு ரூ. 5.38 கோடி என சுமார் ரூ. 31 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது 

Tags:    

Similar News