முதுகலை ஆசிரியர் தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு
அரசுப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர்,கணினி பயிற்றுனர் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள்;
அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், கணினி பயிற்றுனர் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வின் முடிவுகள் trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை தேர்வு எழுதியவர்கள், வினாத்தாள் மற்றும் தாங்கள் அளித்த விடைகளை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியிருப்பதாவது:
கடந்த 2020 - 2021ம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை - ௧, கணினி பயிற்றுனர் நிலை - ௧ நேரடி நியமனத்திற்கான, கணினி வழித் தேர்வுகள், பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டன; 2.13 லட்சம் பேர் எழுதினர்.இந்தத் தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள், வினாத்தாள், பதில் அளித்த விடைகளை, வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கேள்விகளுக்கு உரிய, தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள், அனைத்து பாடங்களுக்கும், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. இதன் மீது ஆட்சேபனைகள் இருந்தால், இணையதளம் வழியாக, உரிய ஆதாரங்களுடன் வரும் 13ம் தேதி வரை தெரிவிக்கலாம்.தபால் அல்லது பிற வழி முறையீடுகள் ஏற்கப்படாது. பாட வல்லுனர்களின் முடிவே இறுதியானது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.