கலங்கரைவிளக்கம்-பூந்தமல்லி இடையே மெட்ரோ ரெயில்

கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி இடையே 26.8 கி.மீ. நீளமுள்ள 3-வது வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி

Update: 2022-04-08 11:52 GMT

காட்சி படம் 

சென்னையில் முதல் கட்டமாக பரங்கிமலை-சென்ட்ரல், விமான நிலையம்- விம்கோ நகர் ஆகிய 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மெட்ரோ ரெயில் திட்டத்தில் 2-ம் கட்டமாக 3 புதிய வழித்தடங்களில் 119 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. மாதவரம்-சிப்காட், மாதவரம்-சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி இடையே இப்பாதைகள் அமைய உள்ளன.

கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி இடையே 26.8 கி.மீ. நீளமுள்ள 3-வது வழித்தடத்தில் 9 ரெயில் நிலையங்கள் சுரங்கப் பாதையில் அமைக்கப்படுகிறது. இதற்காக இந்த வழித்தடத்துக்கு இடையே உள்ள 133 மரங்கள் அகற்றப்பட உள்ளதாகவும், அதனை ஈடுகட்டும் வகையில் 1,596 மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாகவும் தெரிவித்து சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் மெட்ரோ ரெயில் நிர்வாகம் அனுமதி கோரியது.

ரூ.12,669 கோடி செலவிலான இந்த திட்டத்தில் ரூ.22 கோடியே 33 லட்சம் சுற்றுச்சூழல் மேலாண்மைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது. இதை ஏற்றுக் கொண்ட சுற்றுச்சூழல் அமைச்சகம் சென்னை கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரெயில் வழித்தடத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது.

Tags:    

Similar News