தமிழக முதல்வர் பழனிசாமி குறித்தும், அவரது தாயார் குறித்தும் அவதூறாக பேசிய ஆ.ராசா நாளை மாலை 6 மணிக்குள் தலைமை தேர்தல் அதிகாரி முன் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
திமுக எம்.பி ஆ.ராசா முன்னதாக முதல்வர் பழனிசாமி பிறப்பு குறித்து அவதூறாக பேசியிருந்தார். சென்னையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது முதல்வர் பழனிசாமி கண்ணீர் விட்டு அழுதார். இதற்கு பிரதமர் மோடியும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந் நிலையில் நாளை மாலை 6 மணிக்குள் ராசா நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.