சென்னையில் மின்சார ரயிலில் சிக்கி எருமைகள் பலி: ரயில் சேவை பாதிப்பு

சென்னை எழும்பூர் - பூங்க நகர் இடையே மின்சார ரயிலில் சிக்கி, 3 எருமைகள் பலியாகின; இதனால் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது.

Update: 2022-01-22 00:00 GMT

புறநகர் மின்சார ரயில் நிலையத்தில் ரயிலுக்கு காத்திருந்த பயணிகள்.  

சென்னை எழும்பூர் - பூங்காநகர் இடையே மின்சார ரயில் ஒன்று  சென்று கொண்டிருந்தது. அப்போது, தண்டவாளம் அருகே மேய்ந்து கொண்டிருந்த 3 எருமை மாடுகள், திடீரென மிரண்டு ஓடி,  மின்சார ரயிலில் சிக்கின. இதில், ரயில் ஏறி அவை  உயிரிழந்தன. இதனை கண்ட சென்னை புறநகர் மின்சார ரயில் ஓட்டுனர்,  ரயிலை நிறுத்தினர். இதுபற்றி  அதிகாரிக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள்,  45 நிமிடம் போராடி,  ரயிலில் சிக்கி இருந்த எருமை மாட்டின்  உடல்களை அப்புறப்படுத்தினர்.  பின்னர் சென்னை தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்கியது.  மாடு மோதிய விபத்தால் சுமார் ஒரு மணி நேரம்,  சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே,  மின்சார ரயில்கள் ஆங்காங்கே வரிசைகட்டி நின்றதால் பயணிகள் பெரும் அவதிப்பட்டனர். ஒருமணி நேரத்திற்கு பிறகு சீரானது.

Tags:    

Similar News