கொரோனா சிறப்பு மருத்துவமனையாகிறது எழும்பூர் காவலர் மருத்துவமனை!
சென்னை எழும்பூர் காவலர் மருத்துவமனை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் எண்ணிக்கை கூடுகிறதே தவிர குறையவில்லை. அரசு மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது.
இதனால் பள்ளிக்கூடங்கள், மண்டபங்கள் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு வருகிறது. இதேபோல் போலீசாருக்காக சென்னை எழும்பூரில் இயங்கி வரும் மருத்துவமனை கொரோனா மருத்துவமனையாக மாற்றப்படுகிறது.
இதனால் கடந்த ஆண்டைப்போல், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் தற்காலிகமாக காவலர் மருத்துவமனை செயல்படும். இங்கு காவல் அதிகாரிகள், காவல் ஆளினர்கள், அவர்களது குடும்பத்தினர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொளள்லாம் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.