சென்னையில் முழு ஊரடங்கு: 10 ஆயிரம் போலீசார் தீவிர கண்காணிப்பு!
சென்னையில் மட்டும் கொரோனா ஊரடங்கை 10 ஆயிரம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்கனவே கடந்த 10ந் தேதி முதல் 24ம் தேதி வரை விதிக்கப்ப்டட கட்டுப்பாட்டுடன் கூடிய ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஒருவாரத்துக்கு முழு ஊரடங்கை தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்தார்.
இந்த ஊரடங்கு காரணமாக வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு இன்னொரு மாவட்டத்திற்கு மக்கள் செல்லாதபடி மாவட்ட எல்லைகளுக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர்.
சென்னையில் மட்டும் ஊரடங்கை கண்காணிக்க 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மொத்தம் 83 பெரிய மேம்பாலங்கள் 75 சிறிய மேம்பாலங்களில் தடுப்பு வேலிகள் அமைத்து மூடி உள்ளனர். நகர் முழுவதும் 408 போக்குவரத்து சிக்னல்கள் மூடப்பட்டுள்ளன.
அத்தியாவசிய வானங்கள், முன் களப்பணியாளர்கள் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. தேவையின்றி வாகனங்களில் ஊர் சுற்றினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.