சென்னையில் 10 நாட்களில் ஊரடங்கு விதிமீறியதாக 32,980 வழக்குகள் பதிவு!

சென்னையில் கொரோனா முழு ஊரடங்கு விதிகளை மீறியதாக 10 நாட்களில் 32,980 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.;

Update: 2021-05-25 09:55 GMT

கோப்பு படம்

தமிழகத்தில் கொரோனா 2ம் அலை பரவி வருவதால் ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைக்கு செல்வோர் மட்டுமே சாலைகளில் வாகனங்களில் செல்ல வேண்டும். காரணமின்றி ஊர் சுற்றுபவர்கள் மீத போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக இன்று காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் கடந்த 10 நாட்களில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 32,980 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் தேவையின்றி ஊர் சுற்றியவர்களின் 35,629 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tags:    

Similar News